பாபநாசநாதர் திருக்கோயில் - நவகைலாயம்
நவகைலாயங்களில் சூரியனுக்கு உரிய இடம் பாபநாசத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தை சூரிய கைலாயம் என்றும் அழைப்பர். இவ்விடம் சூரிய கைலாயம் என்று அழைபதற்கு கரணம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். அப்பொழுது அவர் சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அவ்வாறு தோன்றியது தான் நவ கைலாய தலங்கள். அதில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதாள் இவ்விடம் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு எழுந்தரியுள்ள இறைவன் பெயர் பாபநாசநாதர், தாயார் உலகம்மை, விமலை, உலகநாயகி . சுவாமிக்கு பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.இங்குள்ள சிவனை பாபசநாதர் என்று அழைபதற்கு பின்னால் ஒரு கதை உண்டு .அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒரு நாள் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார், இதை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதன் காரணமாக இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இத்தொஷதிளிருந்து விமோசனம் பெற பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்" என்று இனொரு பெயர் உண்டு.
இக்கோவிலில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தாக கூறுகின்றனர்.இத்தலத்து லிங்கத்திற்கு " முக்கிளா லிங்கம்' என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.
இன்னும் பல தலத்தினை பற்றியும் அடுத்த பதிவினில் தொடரும்.

No comments:
Post a Comment