நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வங்கக்கடல் ஓரம் இயற்கை எழில் சூழ அமைந்ததுதான் உவரி கிராமம். இங்குள்ள கடற்கரையில் கடம்ப கொடிகளுக்கு இடையே சுயம்புவாய் தோன்றி இப்பூவுலக மக்களின் பிணி போக்கி அருள் செய்து கொண்டு இருக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
இயற்கையில் எழில் வாய்ந்த உவரிகிராமம் முன்பு கீழுர் மேலூர் என்று இரு பகுதிகளாக இருந்தது. இவ்விரு பகுதிகளையும் ஒற்றையடி பாதையே இருந்தது. இதன் வழியாகதான் யாதவர் குல பெண்கள் பால் தயிர் கொண்டு செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும்போது அவ்வழியில் கிடந்த கடம்பக்கொடிகளில் ஒருவரது கால் தினமும் இடறி பால் தயிர் ஆகியவை பானையோடு தரையில் விழுந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே பானைகள் விழுந்து பால் கொட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. தினமும் இவ்வாறு நடந்ததால் வருமன அந்த பெண்ணுக்கு வருமானம் குறைந்தது. இதனால் அவளது கணவன் ஆத்திரமடைந்து நடந்ததை கேட்டான். அந்த பெண்ணும் உள்ளதை உள்ளபடியே கணவனிடம் கூறினாள். இதைக்கேட்ட இவளது கணவன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று அங்கிருந்த கடம்பப்கொடியை கோடாரியால் வேரோடு வெட்டினான். அப்போது அந்த கடம்பக்கொடியின் அடிப்பகுதியில் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.இதனால்அதிர்ச்சி அடைந்த அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதற்கிடையே இந்த சம்பவம் காட்டு தீ போல் ஊருக்குள் பரவியதால் ஊர் பெரியவர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவருக்கு சுவாமியின் இருள் கிடைத்து அவர் மூலமாக இங்கு சிவபெருமாள் சுயம்புவாக தோன்றி இருப்பதும் ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை பூசினால் ரத்தம் வழிவது நின்றுவிடும் என்ற அருள்வாக்கு கிடைத்தது.
அடி முடி அறியா ஓங்கி உயர்ந்த சிவபெருமான் நம் ஊரில் தாமாகவேதோன்றியுள்ளான் என்ற விபரம் அறிந்த ஊர் மக்கள் ஆனந்த வெள்ளத்தில் பக்தி பரவசமடைந்தனர். இதையடுத்து வெட்டுண்ட இடதத்தில் சந்தனத்தை தடவ என்ன ஆச்சரியம் ரத்தம் வழிவது உடனடியாக நின்றுவிட்டது. அன்று முதல் இன்றுவரை சுவாமிக்கு தினமும் சந்தன காப்பு இடப்படுபிறது. மறுநாள் அபிஷேகத்துக்கு முன்பு அந்த சந்தன காப்பு பிரிக்கப்பட்டும் அந்த சந்தணமே அருமருந்தாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பல்வேறு மருத்தவ குணங்கள் நிறைந்தது என்று கூறப்படுகிறது. இங்குள்ள சுவாமியை இதய சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் கேட்வருக்கு கேட்ட வரமும் தீராபிணி கொண்டவருக்கு பிணி தீர்த்தும் அருள் பாலித்து வருகிறார் சுயம்பு லிங்கசாமி. இந்த கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறதா? ஆம் இன்றும் உவரிகோவிலில் நோய் முற்றியவர்கள் 41 நாட்கள் தங்கியிருந்து நலம்பெற்று திரும்புவதை காணலாம். இக்கோவிலின் சிறப்புகளை அறிந்து நெல்லை தூத்துக்குடி குமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும்வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இங்கு வரும் பக்தர்கள் கடல் மண்ணை கடல் நீர் சொட்ட சொட்ட சுமந்து வந்து கடற்கரையில் குவித்து வைக்கும் நேர்ச்சைகளைச் செய்வது வேறு எங்கும் காண முடியாது. மார்கழி மாதம் 30 நாட்களும் சூரிய ஒளி சுவாமி மீது தினமும் படும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.இந்த கோவிலில் உயர்ந்த வாயிலைக் கொண்ட கல் மண்டப சுற்றுபிரகாரத்துடன் கூடியது. கோவிலின் உள்ளே சென்றதும் ஓங்கி உயர்ந்து இருக்கும் கொடிமரத்தை தரிசிக்கலாம். அதையடுத்து பலி பீடம் தொடர்ந்து மூலவர்க்கு முன் நந்தியும் உள்ளது. உள்ளே சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க அதன் கீழ் சிறியலிங்கமாக இருக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதை உணர்த்தும் விதமாக இறைவன் இங்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மசக்திஅம்மன்
தந்தையுடன் தாயும் இருப்பதுதான் சிறந்தது. அதுபோல் இங்கு தாயாக இருந்து பக்தர்களை காப்பவள் பிரம்மசக்தி அம்மன். இந்த அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. மேலும் சுயம்புலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் பிற பரிவார தேவதைகளும்உள்ளனர். கோவிலின் உற்சவ மூர்த்தி சுப்பிமணியர் இக்கோவிலின் தல விருட்சம் கடம்பக்கொடி.

No comments:
Post a Comment