Thursday, January 17, 2013

கடையம்


கடையம்:

கடையம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். குற்றாலம் மற்றும் பாபநாசம் போன்ற மலை நகரங்களுக்கிடையில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஜம்பு நதி பாயும் இயற்கை சுழலில் அமைந்திருக்கும் வேகமாய் வளர்கின்ற கிராமம் ஆகும். சுற்றி இருக்கும் 20 க்கும் மேற்பட்ட சிறுகிராமங்களுக்கு இதுதான் வணிகமையம்.

மேற்கே பார்த்தால் பசும் வயல் வெளி, கோவில், குளங்கள்அதைத் தொடர்ந்து ராமநதி நீர்த்தேக்கம் , மேற்கு தொடர்ச்சி மலை ...தெற்கேயும் குளம் வயல் வெளிகளும் உள்ளன .பாட்டுக்கொரு புலவரான பாரதியார் இவ்வூரின் மருமகன் ஆவார். இங்கு வசித்த செல்லம்மாளை அவர் திருமணம் செய்தார். இவ்வூரில் தன் வாழ்நாளில் சில வருடங்கள் அவர் தங்கியிருந்தார்.

வில்வவனநாதர் திருக்கோயில், ராமநதி நீர்த்தேக்கம் , மலைபகுதியில் உள்ள கோவில், ,பத்ரகாளி அம்மன் கோவில்கள் ,வாசகிரி மலை போன்றவை அங்குள்ள சிறப்புவாய்ந்த இடங்கள் அகும்.

No comments:

Post a Comment