Wednesday, January 16, 2013

பாஸ்போர்ட்


இன்றைய காலத்தில் பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) இன்றியமையாத பொருளாகவிட்டது. முன்பெல்லாம் பெரிய வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்து பெற வேண்டி இருந்தது. ஆனால் இந்திய அரசு இவ்வேலையை மிகவும் எளிதாக மாற்றி உள்ளது.

முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து விடுங்கள் அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.(உப)

http://passport.gov.in/nri/OnlineRegistration.jsp

பெரும்பாலாக கேட்கப்பட்டிருக்கும் தகவல்கள் மிகவும் நேரடியானதாகவே உள்ளது. யாருடைய உதவியுமின்றி நாமாகவே நிரப்பும் வண்ணமே அது அமைந்துள்ளது. எல்லாவற்றையும் பூர்த்தி செய்து , கடைசியாக உங்களது தகவல்களை சரிபார்க்க கேட்கும் போது சரி என்று சொடுக்கவும்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்,

இணைக்க வேண்டிய கோப்புகள்

மூன்று பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்.

II. முகவரிக்கான அத்தாட்சி ( ஏதேனும் இரண்டு ) : ரேஷன் கார்டு, அலுவலக சான்று, தண்ணீர்/தொலைபேசி/மின்சார ரசீது,வங்கி கணக்கு சீட்டுவருமான வரி சீட்டு, வாக்காளர் அடை,துணைவரின்/பெற்றோரின் கடவுச்சீட்டு( ரேஷன் கார்டு எனில் மேலும் ஒரு அத்தாட்சி தேவைப்படும்).

III. பிறந்த நாளுக்கான ( ஏதேனும் ஒன்று ) : பிறந்த போது பதிவு செய்த சான்றிதழ்,பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ்

IV. பிற சான்றிதழ்கள்(குடியுரிமை சான்றிதழ்)

4 ) எங்கே விண்ணப்பிக்க வேண்டும் :

இணையம் வழியில் செய்து இருப்பின் உருவாக்கப்படும் pdf கோப்பை அச்சிட்டு கடவுச்சீட்டு அலுவலகத்தில் கொடுக்கவும்.

PDF கோப்பை அச்சிட்டு அதன் வழியில் செய்தீர்கள் எனில்,

1 ) பாஸ்போர்ட் கவுன்டேர்களில்,
2 ) ஸ்பீட் போஸ்ட் சென்டர்கள்,
3 ) மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகங்கள்,
4 ) பாஸ்போர்ட் சேகரிக்கப்படும் இடங்கள்.

5 ) உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது ரூ.1000 கட்டணம் செலுத்தவும்.

No comments:

Post a Comment