Monday, December 10, 2012

ஸடீவ் ஜாப்ஸ்


சுவாரஸியமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் - ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.



ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் சோனி நிறுவனம் இறங்கியுள்ளது.

ஸடீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் சாதனைப் படைத்தவர். சுவாரஸியமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். புற்று நோய் பாதிப்பு தீவிரமமடை‌ந்த பிறகு தனது எஞ்சிய நாட்களை திட்டமிட்டு கழித்தவர். குறிப்பாக வால்டர் ஜசக்சன் துணையுடன் தனது சுயச‌ரிதையை எழுதினார். ஸ்டீவ் ஜாப்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த சுயச‌ரிதை விரைவில் வெளியாகிறது.

இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து படம் தயா‌ரிக்க சோனி நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான சோஷியல் நெட்வொர்க் படம் உலகளாவில் வரவேற்பை பெற்றதும் சோனியின் ஆர்வத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment