செங்கோட்டை திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும் . இங்கு மேற்கு தொடர்ச்சி மலைக் காணப்படுகிறது. அதனால் மழை அதிகம் பொழிகிறது. ஜூலை முதல் நவம்பர் வரை நிலவும் காலநிலை உடல் நலத்திற்கு ஏற்றது.
இவ்வட்டத்தில் மோட்டை அணை, ஸ்ரீமூ
இவ்வட்டத்தில் மோட்டை அணை, ஸ்ரீமூ
லபேரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முக்கியமானத் தொழில் வேளாண்மையே ஆகும். சொந்த தேவைக்கு ஆனைக் கொம்பன் நெல்லையும், விற்பனைக்குச் சிறுமணிநெல்லையும் பயிரிடுகின்றனர். முதல் போகத்தில் நெல்லுடன் சோளம், உளுந்தும் இரண்டாவது போகத்தில் மிளகாய், வெங்காயம் ஆகியவையும் பயிராகின்றன. மண்பாண்டம் செய்வதும், பிரம்புக் கூடைகள் தயாரிப்பதும் இங்கு சிறந்த முறையில் நடைபெறுகின்றன.
கட்டளைமலைக் குடியிருப்பில் பாலராமவர்மா பஞ்சாலை இருக்கிறது. செங்கோட்டை 'மண்வெட்டி' புகழ்பெற்றது. 'தோசைக்கல்' இங்கு செய்யப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் சந்தை கூடுகிறது. பேல் கட்டப் பயன்படும் மூங்கில் பட்டைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

No comments:
Post a Comment