Monday, December 10, 2012

சங்கரன் கோயில்


திருநெல்வேலியில் இருந்து 54 கி.மீ தொலைவில் சங்கரன் கோவிலில் இந்த கோயில் உள்ளது.

அரி பெரிதா அரன் பெரிதா என்ற சர்ச்சை எழுந்த போது உமா தேவி குழப்பமுற்றாள். ஒருபக்கம் அண்ணன்,இன்னொரு பக்கம் கணவன் யார் பெரியவர் என்று அறியும் பொருட்டு சிவபெருமானை
 நோக்கி ஒற்றை காலில் தவம் இருந்தாள்.இறைவனும் அம்பாளின் சந்தேகம் நீக்க அரியும் நானே அரனும் நானே என்று காட்சி தந்தார்.

ஆடித்தபசு திருநாளில் இறைவன் மாலையில் சங்கர நாரயணனாகவும், இரவில் சங்கரலிங்கமாகவும் காட்சி தருகிறார்.மிகவும் சிறப்பு வாய்ந்த இத்திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் கூடுவது தனி சிறப்பு.கோமதியம்மன் தலத்தில் தரப்படும் புற்றுமண்ணை நாள்தோறும் பூசி அணிபவருக்கு குன்ம நோய், வயிற்றுவலி முதலியனவும் தீராத பிறவிப்பிணிநோய்களும் தீர்கின்றன என்பது இத்தலத்து பக்தர்கள் கண்கூடாக கண்ட உண்மை.

இத்தலம் மகாகவி பாரதியாரால் பாடப் பெற்றதலம் என்பது குறிப்பிடத்தக்கது.பாரதியார் தோத்திரப்பாடல்கள் பகுதியில் கோமதியின் மகிமை என்ற தலைப்பில் இத்தலத்தின் பெருமைகளை பாடியுள்ளார்.

No comments:

Post a Comment