விடுதலைப் போரை முதலில் தொடக்கி வைத்த
பெருமை புலித்தேவனை சேரும்.இவருடைய இயற்பெயர் காத்தப்பதுரை.
இவரது தந்தையார் சித்திர புத்திரத் தேவன், தாயின் பெயர் சிவஞான நாச்சியார்.
திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையார்புரம் என்கிற நெற்கட்டும் செவ்வல் பாளையத்த

ில் பிறந்தார்.
நெற்கட்டும் செவ்வல் ஆட்சிப் பொறுப்பை புலித்தேவன் ஏற்ற காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்ற ஆரம்பித்தது. நவாபு கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறைய கடன்பட்டிருந்ததது.பாளையக்காரர்களிடம் வரியை வசூல் செய்து, அக்கடனைத் தீர்த்திட நினைத்தான் நவாபு.வரி வசூல் செய்ய நவாபால் இயலாது போயிற்று. எனவே, ஆங்கிலேயர்களே நேரடியாக பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்ய ஆரம்பித்தனர்.
புலித்தேவன் வரி கட்ட இயலாது என்று மறுத்து விட்டார்.புலித்தேவனை பணிய வைக்க நினைத்த கர்னல் ஹெரான் 1755-ம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் ஒரு பெரும் படையுடன், புலித்தேவனின் பகுதியான நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டான்.
அதோடு கொஞ்சமாவது முதலில் வரியை செலுத்துமாறு தூது அனுப்பினான். ஆனால், கண்டிப்பாக வரி செலுத்த புலித்தேவன் மறுத்துதுவிட்டார். கோபம் கொண்ட ஹெரான் அவரது கோட்டையைத் தாக்கினான்.
புலித்தேவனின் கோட்டை களிமண் கோட்டை.
அதனை துப்பாக்கியால் சேதப்படுத்த முடியவில்லை.தோல்வியுடன் திரும்பிய கர்னல் இது குறித்து நவாப்பிடம் முறையிட்டான்.
எப்படியும் புலித்தேவனை வீழ்த்த விரும்பினர். புலித்தேவன் 1758-ல் திருநெல்வேலி யை கைப்பற்றினார்.
புலித்தேவனின் வீரம், வளர்ச்சி, எதிர்ப்பு ஆகியவை ஆங்கிலேயரை மிகவும் அதிர வைத்தது. இதனை வளரவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டினர். இதற்காக புலித்தேவனின் எதிரியான யூசுப்கான் என்பவரை பயன்படுத்திக் கொண்டனர். தஞ்சாவூர் - புதுக்கோட்டை அரசர்களின் படையும் ஆங்கிலேயர் அறிவுரைப்படி யூசுப்கானுக்கு உதவி செய்தது. அதோடு திருவாங்கூர் மன்னனின் எதிர்ப்பும் புலித்தேவருக்கு சேர்ந்தது. எல்லாரது எதிர்ப்பு இருந்தும் நெற்கட்டும் செவ்வலை வெல்ல இயலவில்லை. புலித்தேவனே வெற்றி பெற்றார்.இறுதியில் புலித்தேவனின் நெற்கட்டும் செவ்வல், வாசுதேவ நல்லூர், பனையூர் போன்றவை யூசுப்கானால் கைப்பற்றப்பட்டது. அதோடு அவை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
இந்த மாபெரும் வீரனின் இறுதிக்கால வரலாறு இன்று வரை மர்மமாகவே உள்ளது.

No comments:
Post a Comment