Tuesday, December 11, 2012

திருநெல்வேலி சாதனையாளர்கள்: பன்னீர்தாஸ்


திருநெல்வேலி சாதனையாளர்கள்:

வள்ளியூர் அருகில் உள்ள அழகப்பாபுரம் என்ற ஊரில் பிறந்தார்கள் வி.ஜி. பன்னீர்தாஸ் மற்றும் வி.ஜி.சந்தோஷம் அவர்கள், இவர்களின் தந்தை ஞான திரவியம் நாடார் என்னும் பெருமைக்குரிய ஐயாவுக்கு வாய்த்த இரண்டாம் மனைவி இரத்தின
ம் அம்மாளின் பிள்ளை வி.ஜி. செல்வராஜ் மலேசியாவில் பிறந்தவர். தந்தையாரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பெற்றார். ஒரு தந்தைக்கும் இரு தாயருக்கும் பிறந்த குழந்தைகள்ளாக இருந்தாலும் ஒற்றுமையில், பாசத்தில், வளர்ச்சியில் ஒருவருக்கொருவர் எந்த வேறுபாடும் காட்டாமல் மூவரும் ஒன்றாக வளந்தார்கள்.

குடும்ப கஷ்டம் காரணமாக 1955 இல் வாய்ப்புகளை தேடி சென்னை சென்றனர் வி.ஜி. பன்னீர்தாஸ் மற்றும் சகோதரர்கள். அங்கும் பல சோதனைகளை சந்தித்து, பின் வாட்ச்கள் மற்றும் சுவர் கடிகாரங்கள் போன்ற பொருட்களை விற்கும் கடை திறந்தார்கள். இவர்கள் தான் தென் இந்தியாவில் தின கொள்முதல் (Everyday hire purchase) முறைனே அறிமுகப்படுதினார்கள்.

மிகச்சிறிய கடைகளைத் தொடங்கி நடத்தியும், பின்னர் வீட்டுமனைகள் விற்பனையில் ஏற்பட்ட முன்னேற்றம்கொண்டு பிற தொழில்களைப் பெருக்கியும் இன்று உலக அளவில் பல கிளைகளுடன் பல்கி நிற்கின்றது இவர்கள் சாதனை.

இவர்கள் தான் வி.ஜி.பி. என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் நிறுவுநர்கள். பெரிய அண்ணாச்சி வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் திட்டமிட்டு உழைத்த உழைப்பும், தம்பியர்களின் மேல் வைத்த நம்பிக்கையும் அதுபோல் தம்பியர்கள் இருவரும் அண்ணாச்சி மேல் வைத்த நம்பிக்கையும் பல மடங்காகத் தழைத்து இன்று உலக அளவில் புகழப்படும் வி.ஜி.பி. நிறுவனங்கள் பலகோடி மதிப்பில் செழித்துள்ளது.

வி.ஜி.பி. குடும்பம் இந்த அளவு முன்னேறிய பிறகும் மூத்தோர் சொல் கேட்கும் பண்பு வியக்கதக்கது. வி.ஜி.பி. குடும்பத்தினரின் எண்ணிக்கை நூற்றுக்குமேல் இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக ஓரே இடத்தில் வாழ்கின்றனர்,

No comments:

Post a Comment