இன்றுஅறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்
அவரை பற்றிய சில குறிப்புகள் தெரிந்துகொள்வோமா!
இவர் 15-09-1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் நடராசன், , தயார் பெயர் பங்காரு அம்மாள் ஆகும் 1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்
றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானிபொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார் .
நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.இவர் தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார் ….