Monday, January 28, 2013

திருநெல்வேலியின் தென் திருப்பதி

திருநெல்வேலியின் தென் திருப்பதி:

நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தில் தென் திருப்பதி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் தென் திருப்பதி என்றால் அது மேலத் திருவேங்கடநாதபுரம் கோயிலை மட்டுமே குறிக்கும். 

இக்கோவில் ஸ்வேதா வராஹ மலைக்கு மேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள பெருமாளை வழிபட்டால் அது திருப்தி பெருமாளை வழிபட்டதுக்கு ஒப்பாக கருதப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 7 தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறந்த சுற்றுலாத் தளம்.


--------

Tirunelveli Then-Tirupathi:

The Mela Thiruvenkatanathapuram temple’s sanctum sanctorum has Lord Srinivasa deity. It is located at the top of the Swetha Varaha hill.The temple is located 7 to 10 km south west of Tirunelveli. 


This temple/place is also called Thirunankovil. The most importance of this temple is that visiting this temple is equal to the visit to Tirupathi.

திருநெல்வேலி: நெல்லுக்கு வேலி கட்டிய விழா!!!

திருநெல்வேலி: நெல்லுக்கு வேலி கட்டிய விழா!!!


தென்தமிழகத்தின் பெருநகரம். வற்றாத தாமிரபரணி, இங்கேயே தோன்றி இங்கேயே மறைந்து விடுகிறது. அதனால், எந்த பிரச்னைக்கும் ஆளானதில்லை இந்த நதி. சுருக்கமாக,நெல்லை என்று இவ்வூரை அழைப்பர். நெல்லுக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் உள்ளதால், திருநெல்வேலி என்ற பெயர் அமைந்தது. முழுதும் கண்ட ராமன் என்ற மன்னன், திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில், 12 ஆண்டுகள் மழை இல்லை. வற்றாத தாமிரபரணி கூட, வறட்சியின் பிடியில் சிக்கியது. மக்களுக்கு எப்படி உணவிடுவது என்று மன்னன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான். வேதசன்மா என்பவர், தினமும் நெல்லை வந்து, நெல்லையப்பரை வணங்குவார். உணவுக்கு என்ன தான் பஞ்சமாக இருந்தாலும், தங்களை வாழவைக்கும் நெல்லையப்பரை மட்டும் பட்டினி போட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக, தினமும் அரிசி எடுத்து வந்து, இறைவனுக்கு நைவேத்யம் படைத்து வந்தார். பக்தர்களை சோதிப்பதில் சிவனுக்கு நிகரானவர் யாருமில்லை! அவர் வேதசன்மாவுக்கு சோதனை வைத்தார்.

அவரது சொத்துகளை படிப்படியாகக் கரையச் செய்தார். மிஞ்சியது ஒரு மூடை நெல் மட்டுமே! அது தீர்வதற்குள், மழை பெய்து வயல்கள் விளைந்தாக வேண்டும். பெருமானே... நான் பட்டினி கிடந்தேனும், உனக்கு தினமும் அமுது படைப்பேன். இந்த நெல் தீர்வதற்குள் மழை பொழிந்து, உன் பங்கையாவது பெற்றுக் கொள்... என்று வேண்டினார். சிவன் அவரது கோரிக்கையை ஏற்றார். ஆனால், அதிலும் ஒரு சோதனை. ஒருநாள், வேதசன்மா நைவேத்யத்திற்குரிய நெல்லை, திறந்த வெளியில் காயப்போட்டு விட்டு, தாமிரபரணிக்கு நீராடச் சென்றார். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. வேதசன்மா மகிழ்ந்த அதே வேளையில், ஐயையோ... நெல்லை வெட்ட வெளியில் காயப்போட்டு வந்தோமே... அது நனைந்து விட்டால், இன்றைய நைவேத்யத்திற்கு நெல்லுக்கு எங்கே போவது? என வேகமாய் வீடு திரும்பினார்.

என்ன அதிசயம்... நெல்லைச் சுற்றி மழை பெய்ததே தவிர, நெல் மீது சொட்டு தண்ணீர் விழவில்லை. மழை நீர் வேலி போல் சுற்றி நின்று, உள்ளிருந்த நெல்லைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வேதசன்மா பரவசமடைந்தார். நெல்லுக்கு வேலியிட்ட நாதா என்று விழுந்து வணங்கினார். சிவன் நிகழ்த்திய இந்த திருவிளையாடல் காரணமாகவே, அதுவரை, வேணுவனம் என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, நெல்வேலி ஆனது. பின், மரியாதை கருதி, திரு என்ற அடைமொழி சேர்ந்து, திருநெல்வேலி என மாறியது. சிவன், நெல்லையப்பர் எனும் சிறப்புப்பெயர் பெற்றார். அந்த பெயரே நிலைத்து விட்டது. தைப்பூசத் திருவிழாவின் நான்காம் நாள், நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி, நெல்லையப்பர் கோவிலில் நடத்தப்படும். தாமிரபரணியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு, நெல்லையப்பர் கோவிலின் அமைப்பே காரணம் என்கின்றனர். எல்லாக் கோவில்களிலும் சுவாமி அபிஷேக தீர்த்தம், வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கு நோக்கி இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருண பகவான், எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம். இக்கோவிலில், மூன்று மூலவர்கள் உள்ளனர். வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவரே, நெல்லையப்பர் எனப்படுகிறார். இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னிதி முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னிதியும் இருக்கிறது. இவரே, இக்கோவிலின் முதல் லிங்கம் என்பதால், இவருக்கு முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராக வணங்கப்படுகின்றனர். பரணியில் நீராடி, பாவங்களைத் தொலைத்து புண்ணியத்தைப் பெற்றுச் செல்ல, நெல்லை நோக்கி பயணியுங்கள்.

Guess this place!!!

Guess this place!!!

Answer: Ettayapuarm Aranmanai

Wednesday, January 23, 2013

ஆதிவராகர் திருக்கோயில்


ஆதிவராகர் திருக்கோயில்:

To view the English translation see below the Tamil version.

ஆதிவராகர் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டமான கல்லிடைக்குறிச்சியில் அமைந்துள்ளது. இங்கு எளுந்தரிளியுள்ள இறைவன் பெயர் ஆதிவராகப்பெருமாள் மற்றும் பூமாதேவி அகும். மூலஸ்தானத்தில் ஆதிவராகர் மடியில் பூமாதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு "நித்ய கல்யாணப்பெருமாள்' என்றும் பெயர் உண்டு. இக்கோவில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.இக்கோவில் விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது. பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதிக்கு பின்புறம் சிலாரூபமாக இருக்கிறது. இத்தலத்திற்கு திருக்கரந்தை மற்றும் கல்யாணபுரி என்ற புராணப்பெயர்கள் உண்டு.

இக்கோவில் பின்னால் ஒரு கதை உள்ளது வாருங்கள் காண்போம். ஒரு சமயத்தில் குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். இங்கு பல இடங்களுக்கு சென்று சிவ பெருமானை தரிசித்து வந்தான் , பின்பு பெருமாளை தரிசிக்க விரும்பினான். அதற்காக ஒரு சிலை வடித்து, தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிறிது காலத்தில் இந்த இறைவன் இருந்த இடம் மறைந்துவிட்டது. ஒரு நாள் பக்தர் கனவில் இறைவன் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் இத்தலத்தில் இருப்பதாக உணர்த்தினார். பக்க்தரால் அச்சிலை இருந்ததைக் கண்டுபிடித்து கோவில் கட்டப்பப்பட்டது.


Sri Adhi Varaha Perumal temple is located in KallidaiKurchi at Tirunelveli. In this temple Lord Adhi Varahaswami appears with bhooma Devi on His lap looking at Him. He is also called as Nitya kalyana Perumal. Here, Mothers Sridevi and Bhoodevi are in separate shrines in the prakara.There is a shrine in the vimana-tower above sanctum sanctorum for Reclining Perumal with Mother Sridevi & Bhoodevi.The Dasavathara – 10 incarnations of Lord Vishnu- are in idol forms behind the Perumal shrine.

There is a story behind the construction of the temple.Kubera, the God of Wealth came down to earth to seek relief from a curse he incurred. After worshipping various Shiva temples, he desired to worship Lord Vishnu. He made an idol of the Lord, installed it on the banks of River Tambiraparani and worshipped. In course of time, the place disappeared. Lord appeared in the dream of a devotee and disclosed His presence in the place. The devotee found the idols. The temple was built later.

Riddles Corner


Riddles Corner: :-)

Lets start commenting our Answers
2Like ·  ·